“பத்துன்புர அருணோதய” நடமாடும் சேவை 2026.08.20 ஆம் திகதி மாஜுவான ஸ்ரீ புஷ்பாராம விகாரையில் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கான வழிகாட்டல்களை பத்தேகம பிரதேச செயலாளர் திருமதி நிலுகா எல். சூரியஆரச்சி அவர்கள் வழங்கியதுடன், இதன் அமைப்புப் பணிகளை பிரதேச செயலக அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதற்காக வேவெல்தெனிய, மடோல்தூவ, மாஜுவான, கெரெதேவல, படகெட்டய ஆகிய கிராம நிலாதாரி பிரிவுகளின் மக்கள் கலந்துகொண்டதுடன்,
-
அடையாள அட்டைகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்குதல்
-
சிறுவர்கள் தொடர்பான செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துதல்
-
குறுந்திரைப்படக் காட்சி
-
முதியோர் அடையாள அட்டைகள் மற்றும் சமூக சேவைப் பணிகளை முன்னெடுத்தல்
-
காணி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுதல்
-
வியாபாரப் பெயர் பதிவுசெய்தல்
-
தொழிற்கல்வி வழிகாட்டல் வழங்குதல்
-
விவசாயப் பயிர் சிகிச்சை முகாம் (Crop Clinic)
-
பல் மருத்துவ முகாம்
-
தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம்
-
ஆயுர்வேத மருத்துவ முகாம்
-
பிரதேச சபையினால் நடத்தப்பட்ட கழிவுப் பொருட்கள் சேகரிப்பு சந்தை
போன்ற பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்குக் கிடைத்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. திலங்க யூ. கமகே அவர்களுக்கும், போக்குவரத்து மற்றும் பிரசாரப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பத்தேகம பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு. லலித் சேனநாயக்க அவர்களுக்கும் பணியாளர்களுக்கும், நடமாடும் பேருந்துகளை வழங்கிய தென் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும், தென் மாகாண ஆயுர்வேத திணைக்களத்திற்கும் அதன் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும், பத்தேகம மாவட்ட வைத்தியசாலையின் மருத்துவப் பணியாளர்களுக்கும், சிறு ஏற்றுமதிப் பயிர்கள் திட்ட அதிகாரி, தலைமையக விவசாய ஆலோசகர், தென்னை அபிவிருத்தி அதிகாரி மற்றும் கறுவா அபிவிருத்தி அதிகாரி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், இந்நிகழ்வை வெற்றிகரமாக்க ஒத்துழைப்பு வழங்கிய மாஜுவான ஸ்ரீ புஷ்பாராம விகாரையின் விகாராதிபதி பத்தேகம யதிரதன தேரர் உட்பட பிரதேசத்தின் அனைத்து மக்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.















